Saturday 18th of May 2024 01:20:31 AM GMT

LANGUAGE - TAMIL
-
ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி மூன்றாம் கட்ட  மனிதப் பரிசோதனையில் முன்னேற்றம்!

ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனையில் முன்னேற்றம்!


ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனையில் பக்க விளைவுகள் இன்றி சாதாகமான முடிவுகள் வெளியாகியுள்ளதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல நுண்ணுயிரியல் நிபுணரும் ஆய்வாளருமான டேவிட் தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஜென்னர் மற்றும் அஸ்ட்ராஜெனிகா நிறுவனங்கள் தயாரித்துவரும் கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனை பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனையில் இந்தத் தடுப்பூசி போடப்பட்டவா்களுக்கு எந்தப் பக்க விளைவுகளும் ஏற்படாமல் சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன என நுண்ணுயிரியல் நிபுணரும் ஆய்வாளருமான டேவிட் தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசிக்கு அடிப்படையான மரபணு வழிமுறைகள், பாதுகாப்பாகவும் முடிந்தவரை விரைவாக உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதை உறுதிப்படுத்த முடிகிறது எனவும் அவா் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரேசிலில் நடைபெற்றுவரும் ஒக்ஸ்போர்ட் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மனிதப் பரிசோதனையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒருவர் உயிரிழந்ததாக சில நாட்களுக்கு முன்ன தகவல் வெளியானது.

இருப்பினும் அவர் இறந்ததற்கான காரணத்தை வெளியிட பிரேசில் சுகாதாரத்துறை மறுத்துவிட்ட நிலையில் தடுப்பூசி சோதனை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் தங்களது தடுப்பூசி மருத்துவ பரிசோதனையின் பாதுகாப்பு குறித்து எந்தச் சந்தேகமும் இல்லை. கொரோனா தடுப்பூசியின் சோதனை முயற்சி வழக்கம்போல் நடைபெறும் என ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE